இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 2.9 பில்லியன் டொலர் நிதி நிவாரணத்தை பெறுவது இலகுவாக இருக்கும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது நிலைப்பாட்டை திங்கட்கிழமை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.