தமிழகத்தில் மூன்றாவது மனைவியுடன் எடுத்த வீடியோ, புகைப்படங்களை வைத்து மிரட்டிய கோடீஸ்வர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சானடோரியத்தில் 40 வருடங்களுக்கு மேலாக தோல் வியாபாரம் செய்துவரும் பீகாரை பூர்வீகமாக கொண்ட கோடீஸ்வரரின் இளையமகன் சபீக் அகமது.
ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து மனைவிகளை விவாகரத்து செய்த சபீக் மூன்றாவதாக அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்ற ஐதராபாத் பெண்ணை 2019ல் மூன்றாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அந்த பெண்ணுக்கும் இது மூன்றாம் திருமணமாகும்.
திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது அதை புகைப்படங்களாக சபீக் எடுத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் கர்ப்பமான மனைவியின் கருவை வற்புறுத்தி சபீக் கலைத்துள்ளார்.
தொடர்ந்து அவரின் சைக்கோதனமான நடவடிக்கையை பொறுக்க முடியாமல் அவர் மனைவி பொலிசில் புகார் கொடுத்துவிட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் கோபமடைந்த சபீக், தன்னுடன் வந்து குடும்பம் நடத்தாவிட்டால் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவேன் என மனைவியை மிரட்டினார்.
மேலும் ஒரு புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைக்க அதை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் கொடுத்தார்.
பொலிசார் வந்து சபீக்கை கைது செய்த நிலையில் அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் வீடியோக்கள் மட்டுமில்லாமல், முதல் மற்றும் 2 வது மனைவியின் வீடியோக்களும் சிக்கியது.
விசாரணையில் இதே போல இரண்டு மனைவிகளை டார்ச்சர் செய்தது தெரியவந்தது.தற்போது கைது செய்யப்பட்ட சபீக்கிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பகீர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.