கெஸ்பேவவில் இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து இரும்பு துண்டுகள் வெளியே வீசப்பட்டதில் 7 பேர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் எழுவரும் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கெஸ்பேவ தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.