மட்டக்களப்பு – ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இன்று (27) அதிகாலை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை தேவகியின் வீட்டுக்கு சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் முரண்பட்ட நிலையில் இருதரப்பு மோதலாகி அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் மரணமானார்.
இச்சம்பவத்தில் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்