லட்சத்தை கடந்த உயிரிழப்புக்களில் அதிக பாதிப்புக்கு யாருக்கு ?
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்வர்களின் எண்ணிக்கை லட்சத்தைக் கடந்து விட்ட நிலையில், இறப்புக்கு உள்ளானவர்களில் இரண்டில் ஒருவர் ஆண்களாக காணப்பட்டுள்ளனர்.
100 404 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா முதல் அலையின் போது 34 093 பேரும், இரண்டாம் அலையின் போது 41 882 பேரும், மூன்றாம் அலையான தற்போது இதுவரை 24 ஆயிரத்துக்கு அதிகமானவர்களும் பலியாகியுள்ளனர்.
இதுவரை உயிரிழந்தவர்களில் 92 600 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளதோடு, 6 700 பேர் 45-65 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.
600 பேர் 15-44 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும், 10 பேர் 14 வயதுக்கு குறைவானதாகவும் இருந்துள்ளனர்.
இருதயநோய், சக்கரைவியாதி, உடற்பருமன் ஆகிய பிரதான சுகவீனம் உள்ளவர்களே இறப்புக்கு அதிகம் உள்ளானவர்களாக காணப்பட்டுள்ளனர்.