மேஷம்
சந்திரன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறது. திடீர் பணவரவு வரும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
சந்திரன் சஞ்சாரம் தொழில் ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.
மிதுனம்
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்
கடகம்
சந்திரன் பிற்பகல் வரை 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 2 மணி வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை செய்யலாம். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சஞ்சலங்கள் நீங்கும்.
சிம்மம்
சந்திரன் சஞ்சாரம் எட்டாவது வீட்டிற்குள் வருவதால் பிற்பகலுக்கு மேல் கவனம் தேவை.
பிற்பகல் 2 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது. உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணவரவு நன்றாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.
சந்திரன் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது. மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்
துலாம்
சந்திரன் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு அற்புதமாக உள்ளது. பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாகவும் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடவும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
தனுசு
சந்திரன் பயணம் முயற்சி ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறது. மனதில் நிம்மதி ஏற்படும்.
இன்று நீங்கள் ஆன்மீக பயணம் செல்வீர்கள். ஆலய தரிசனம் மன அமைதியைக் கொடுக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து முயற்சி ஸ்தானத்திற்கு மாறுகிறார். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பிற்பகல் வரை பயணம் செய்கிறார். பிற்பகலுக்கு மேல் சந்திரன் குடும்ப ஸ்தானத்திற்குச் செல்கிறார். இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.
மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் நுழைகிறார். மனதில் லேசான தடுமாற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அனுகூலப் பலன் கிடைக்கும்.
குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.