16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டி இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கான இறுதி போட்டி மழை காரணமாக தினம் தடைபட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி நேற்றிரவு 7.30 க்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அஹமதாபாத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக போட்டி தாமதமானது.
அதனடிப்படையில் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத் விளையாட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.