சுவைக்கு மெதுவாக இருக்கும் பழமான பைனாப்பிளின் தோல்கள் கரடுமுரடாக இருந்தாலும், அந்த தோலிலும் சில சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
பைனாப்பிள் தோல்களை வைத்து டீ தயார் செய்து பருகலாம்.
பைனாப்பிள் தோலில் டீ என்பது பலரும் ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
அழற்சி பாதிப்பை போக்கும்
சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களும், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த பைனாப்பிள் தோல் டீ பருகுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு சமநிலை அடைகிறது. உடலினுள் ஏற்படும் பல்வேறு வகையான அழற்சி பாதிப்பை போக்கவும் செய்கிறது.
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும்
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் பைனாப்பிள் பழத்தின் தோல்களில் டீ தயார் செய்து குடித்து வருவதன் மூலம் இதய ஆரோக்கியம் பலமடைகிறது. மிக முக்கியமாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதை பருகுவதால் உடல் எடை நிர்வகிக்கபடுகிறது.
பைனாப்பிள் தோல்களை வைத்து டீ தயார் செய்யும் முறை
முதலில் பைனாப்பிள் தோல்களை நீரில் இட்டு அதனுடன் 1 கருவப்பட்டை 5 கிராம்பு மற்றும் 10 புதினா இலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்த வேண்டும் 5 நிமிடங்களுக்கு பிறகு சிறிய நிறமாற்றம் ஏற்படும் போது அதனை வடிகட்டி எடுத்தால் சுவையான பைனாப்பிள் டீ தயாராகி விடும்.