பொதுவாகவே இனிப்பு என்றால் எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான். ஆனால் இனிப்புகளையும், இனிப்பு உணவுகளையும் அதிகம் சாப்பிட்டால் சக்கரை நோய் வரும் என பயந்து சிலர் அவற்றை ஒதுக்குவதும் உண்டு.
ஆனால் ஒரு சிலர் இனிப்புக்களையும் இனிப்பு உணவுகளையும் அதிகம் சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிப்பார்கள் இந்தப் பழக்கம் நல்லதா? கெட்டதா? என்றுக் கேட்டால் ஆபத்து என்றுதான் சொல்லலாம். அப்படி என்னென்ன ஆபத்து வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இனிப்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று சொன்னாலும் இதனால் நம் உடலில் அதிக அளவு இரத்த சர்க்கரை ஏற்படும் மேலும், டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும் அதனால் இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்றது.
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் அது கூடுதலாக அதிக தண்ணீரை சேமித்து வைப்பதன் விளைவாக தற்செயலாக எடை அதிகரிக்கும்.
அதனால் நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது உங்கள் உடலில் உள்ள கூடுதல் குளுக்கோஸை அகற்ற உதவும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்ணும்போதும், நிறைய தண்ணீர் அருந்தும்போதும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்து எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.