திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி இணையாளர் தேர்வு இதில் முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.
திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். பொதுவாகவே கரிநாள்களில் சுபகாரியங்கள் செய்யவே கூடாது. அதிலும் திருமணம் செய்தால் வாழ்வே நாசம் ஆகிவிடும். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
பொதுவாகவே கரிநாட்களில் சூரிய கதிர் வீச்சு பூமிக்கு மிக அதிகமாக இருக்கும். இவை உடம்பில் இருக்கும் சுரப்பிகள் மற்றும் ஹார்மோனை சராசரியை விச மிக அதிகமாகத் தூண்டவைக்கும். இதனால் சாதாரண நாள்களை விட இதுபோன்ற சமயங்களில் நாம் அதிக உணர்ச்சி வசப்படுவோம். கூடவே கோபம், குழப்பம் ஆகியவையும் அதிகமாக இருக்கும்.
அந்த நாள்களில் சூரிய கதிர் வீச்சு உடம்பில் படுவதால் உடல் உறுப்புகளையும் பாதிகும். அதனால் கரிநாள்களில் திருமணம் செய்வதும், அன்றைய நாளில் வாழ்வில் இணையுடன் சேர்வதும் ஆபத்தானது. எனவே, இனி கரிநாளில் திருமணம் செய்துவிடாதீர்கள்.