தற்காலத்தில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் கண்ணில் கருவளையம் உண்டாகுதல்.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதிக நேரம் தூங்காமல் இருப்பதனால் தான் கருவளையம் வருகிறது என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கருவளையம் வந்துவிட்டால் முகம் பொலிவிழந்து முதுமையானது போல் தோற்றமளிப்பீர்கள்.
அழகை கெடுக்கும் இந்த பிரச்சினைக்கு பாதாம் எண்ணெயை பயன்படுத்தி தீர்வு கொடுக்கலாம். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்ப்போம்.
பாதாம் எண்ணெயில் வைட்டமின் டி, ஏ, ஈ, மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இது சருமம் முதல் கூந்தல் வரை பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. இதனை பயன்படுத்தி கண்களுக்கு மசாஜ் கொடுக்கும் போது கருவளையம் தடம் தெரியாமல் மறைந்து விடும்.
1. கருவளையம் பிரச்சினையுள்ளவர்கள் இரவு தூங்க செல்லும் முன்னர் தினமும் பாதம் எண்ணெயை சில துளிகள் கையில் எடுத்து கண்களுக்கு கீழ் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
2. கருவளையம் உள்ள இடத்தில் மட்டும் செய்யாமல் அவசியம் இருந்தால் முகத்தின் எல்லா பகுதிகளிலும் மசாஜ் செய்யலாம்.
3. தூங்கி எழும்பி, மறுநாள் காலையில் வெறும் தண்ணீரால் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.
4. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் என்றே ஒன்று இல்லாமல் போகும்.