இந்தியாவில் இருந்து பெண் ஒருவர் காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் தமிழ் நாடு வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இன்று இவ்வாறு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு வருடங்களாக கத்தாரில் பணி புரிந்து வந்த நேரத்தில் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவரையே கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.