பொதுவாக நம் நாட்டில் பல்வேறு வகையான காய்கறிகள் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும் நம்மில் பலரும் தினசரி மாற்றி மாற்றி ஒரே வகையான காய்கறிகளையே சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் அலப்பரிய சத்துக்கள் நிறைந்த மற்றும் பலராலும் அறியப்படாத காய்கறிகளுள் ஒன்று தான் கொத்தவரங்காய். இதில் காணப்படும் எண்ணற்ற பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, சீரான செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கின்றது.
கொத்தவரங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது, ஆனால் அதிக நார்ச்சத்து உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது.
நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் விரைவில் எடை குறைய இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கொத்தவரங்காயில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்க உதவும்.
புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட மற்ற வகை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் இது இன்றியமையாததாக காணப்படுகின்றது.
கொத்தவரங்காய் ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணியாகும் எனவே வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதனால் உடல் வலியை எந்தவித மருந்துக்களும் இன்றி இயற்கையாக போக்க முடியும்.
கொத்தவரங்காயில் அதிக இரும்புச்சத்து காணப்படுவதனால் மாரடைப்பு உட்பட பல இதய கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கொத்தவரங்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் முகப்பரு பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.

