ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் வரசியா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு அருண் மகேஷ்பாய் மாவி என்ற 2 வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில், இந்த குழந்தை நேற்று மாலை வீட்டிற்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து, உடனடியாக தீயணைப்பு மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை நீண்ட போராட்டத்திற்கு பின் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்