காதலுக்கு கண்ணு மட்டுமா தெரியாது. வயது வித்தியாசமும் பார்க்க தெரியாது என்பது பல நேரங்களில் உண்மை. ‘பக்கத்து வீட்டு பைய தன்னைவிட பெரிய பொண்ணை லவ் பண்றானாமே?’ கண்டிப்பாக நாமும் இது போன்ற செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆணுக்கு 27 வயது பெண்ணிற்கு 37, இப்படி பத்து வருஷ வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? அதுவும் தன்னை விட 10 வருட மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? இப்படி பல சந்தேகங்கள் இருக்கும்.
பெற்றவர்கள் முன்னாடி போய் மூத்த பெண்ணை காதலிக்கிறேன் அதுவும் 10 வருட மூத்த பெண் என சொன்னால், பெற்றவர்களே காதல் என நினைக்க மாட்டார்கள், கா ம வலையில் சிக்கிவிட்டான் என்று தான் முதலில் சிந்திப்பார்கள். ஏனெனில் காதலிக்க எத்தனையோ பெண்கள் சிறுவயதில் இருக்கும்போது, எப்படி பெரிய வயது பெண்ணை காதலிப்பான்? என்று தான் நினைப்பார்கள். ஆனால் பக்குவப்பட்ட ஆண், தனக்கான சரியான துணையை தேடி சலிப்படைந்த ஆண் வயதை கண்டிப்பாக பார்க்க மாட்டார். வாழ்க்கை முழுக்க இந்த பெண்ணுடன் இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு குறைச்சல் இருக்காது என பார்க்கும் ஆணுக்கு, வயது ஒரு தடையாக இருக்காது. ஆனால் என்னதான் அந்த ஆண் முயன்றாலும் கூட உறவினர்கள், ‘குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை பெண் தாண்டிவிட்டார் என சொல்லிக்கூட இந்த திருமணத்தை நிறுத்த முயற்சி செய்வார்கள். விரைவில் க ருத்தரிக்க முடியாது, உனக்கு ஆசை பெருக்கெடுக்கும் போது அந்த பெண்ணிற்கு உ றவில் ஈடுபடும் ஆசையே இல்லாமல் போய்விடும்’ என்றெல்லாம் கூறி வரனை தட்டிவிட பார்ப்பார்கள். ஆனால் பெண்களுக்கு 50வயது வரை உ றவு கொள்ள ஆர்வம் இருக்கும். குழந்தை பேறு கிடைக்காதா என சந்தேகம் இருக்கும் போது மட்டும் ம ருத்துவரை அணுகலாம்.
பிரெஞ்ச் அதிபர் மாக்ரோன் தன்னைவிட பெரிய பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் குறையாமல் வாழவில்லையா? வெளிநாட்டில் காதலை காதல் போல மட்டுமே பார்க்கிறார்கள். பெரிய பெண்ணை காதலிப்பதை கா மத்தின் வரிசையில் பார்ப்பதில்லை. இங்கு தான் இது போன்ற தாறுமாறான எண்ண அலைகள். மேற்கத்திய நாடுகளில் இருந்து தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் பின்பற்றி கொண்டிருக்கிறோம். இது போன்ற சில நல்லவற்றையும் எடுத்துக்கொள்ளலாமே?