ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தாய் நாட்டுக்கு உடனடியாக திரும்ப வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை நாடாளுமன்றிடம் ஒப்படைத்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய தாய் நாடு திரும்ப வேண்டுமென எச்சரித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோரின் சுயநலவாத செயற்பாடுகளினால் 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது.
அரசாங்கம் பொதுமக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.