தங்களது நிரந்தர பணி இடத்திலிருந்து தற்காலிகமாக, வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு, இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் நிரந்தரப் பணி இடங்களுக்கு, மீள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா; நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுச் சூழல் காரணமாக, நாட்டில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நிரந்தரப் பணி இடத்திலிருந்து, தற்காலிகமாக வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், இணைப்புக் காலம் முடிவடைந்தப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பித்ததும், நிரந்தரப் பணி இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றார்.மேலும், மீண்டும் இணைப்பை நீட்டிக்க விரும்பினால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தனது நிரந்தரப் பணி இடத்திலிருந்து அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை கல்விப் பணிப்பாளர் ஊடாக (ஆசிரியர் இடமாற்றம்) அனுப்பி வைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.