இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.
மருத்துவப் பயன்கள்:-
◆இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன.
◆நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம்.
◆இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.
◆இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும்.
◆சிறுநீர் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும்.
◆விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும், ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும்.
◆நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும்.
◆பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
◆எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்