திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன் (வயது 35) இவரது மனைவி அனுஷியா (வயது 25) இவர்கள் இருவருக்கும் 3 வயதுடைய பெண் குழந்தை உள்ளதுதிருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியில் மகேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி அனுஷியா குழந்தையுடன் திடீரென மாயமாகியுள்ளார் இந்த விஷயம் தொடர்பாக மகேந்திரன் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்
விசாரணையில், அனுஷியா மற்றும் அவரது குழந்தை வேலம்பாளையம் பகுதியில் உள்ள அனுஷியாவின் கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் இருப்பது தெரியவந்துள்ளது
இதனையடுத்து நேரில் சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டு, அறிவுரை கூறி கணவர் மகேந்திரனுடன் அனுப்பி வைத்தனர் இந்நிலையில், தம்பதிகளுக்குள் மீண்டும் நேற்று தகராறு ஏற்பட்ட நிலையில், அனுஷியா தனது தோழி சுதா என்பவரின் வீட்டிற்கு குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார்
இதன்போது, சுதா தம்பதிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்த சமயத்தில், தோழியின் பேச்சினை கேட்காத தம்பதிகள் எங்களது வாழ்க்கை பிரச்சனை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்
மேலும், குழந்தையுடன் வெளியே சென்று காத்திருக்குமாறு தெரிவிக்கவே, சுதா குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார் சிறிது நேரத்திற்கு பின்னர் அனுஷியா அலறும் சத்தம் கேட்கவே, அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்க்கையில், அவர் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு மயங்கி கீழே கிடந்துள்ளார்
அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லவே, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்
இந்த விஷயம் தொடர்பாக சுதா வழங்கிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அனுஷியாவின் கணவர் மகேந்திரன் மற்றும் கள்ளக்காதலன் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்