உலகக் கோப்பை கிளப் கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கத்தார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
கத்தாரில் டைக்ரஸ் யுஏஎன்எல் அணிக்கும் பேயர்ன் மூனிச் அணிக்கும் போட்டி நடைபெற்றது.இதன்பின்னர் போட்டியில் சிறப்பாகப் பணியாற்றிய நடுவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அப்போது ஆண் நடுவர்களுக்கு விருது வழங்கிய கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல் தானி, பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்து விட்டார்.எதற்காக அவர் இப்படி செய்தார் என்ற கேள்வி கிளம்பியது.
இதற்கான விளக்கம் தற்போது கிடைக்க பெற்றுள்ளது.இஸ்லாமியச் சட்டப்படி அன்னியப் பெண்களைத் தொடக் கூடாது என்பதால் அவர் அப்படி நடந்து கொண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.