அநுராதபுர மாவட்டத்தில் உள்ள 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று (10) செலுத்தியுள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அநுராதபுர மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.