டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்றையதினம் அதிரடியாக விலை ந்குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 12) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை வெள்ளியின் விலை 10 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை(12) விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்- 5,720
1 சவரன் தங்கம்- 45,760
1 கிராம் வெள்ளி- 77.70
1 கிலோ வெள்ளி- 77,700