காலி, அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த உதரி விஷ்மிகா (22) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
அவர் தனியார் மருத்துவ பரிசோதனை கூடமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இளையவர்களிற்கு கொரோனா அபாயமில்லையென முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், இலங்கையில் பரவும் 3வது அலையில் இளையவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.