அரசிலிருந்து வெளியேறுவதற்கு 44 பேர் தயார் இருப்பதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 60 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவர்கள் அனைவரும் ஓர் கூட்டணியாகவே வெளியேறுவார்களென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ள அவர்களை பிரதமர் மஹிந்தவே சமரசப்படுத்தி கூட்டணியில் தக்கவைத்துதுடுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றதும் அவர்கள் வெளியேறிவிடுவது உறுதி என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாது அவர்கள் சஜித் தரப்புடன் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றையும் கைச்சாத்திடவுள்ளதாகவும், அதற்கான பேச்சுகளும் ஆரம்பமாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.