பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதும் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் இயல்பான விடயமாகும்.

ஆனால் இது வேலைக்கு செல்லும் நபர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும். சில சமயங்களில் ஆடை முழுமையாக நனைந்துவிடும் அளவுக்கு வியர்வை வெளியேறும்.இந்த பிரச்சினைக்கு எவ்வாறு எளிமையாக தீர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உணவில் கவனம் தேவை

சூழல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் அதிக காரமான உணவு, வறுத்த, பொறித்த உணவுகளை முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது அதிகமாக வியர்வை வெளியேறுவதை கட்டுக்குள் வைக்க துணைப்புரியும்.

மேலும் அதிக நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

உடற்பயிற்சி அவசியம்

தினசரி முறையான உடற்பயிற்சியில் ஈடுப்படுவதனால் ஹார்மோன்கள் சீராகி உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. உடற்பயிற்சியின் பின்னர் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கின்றது இதனால் வியர்வை வெளியேறுவது குறைவடைகின்றது.

தினசரி குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு. முறையாக கழிவுகளை வெளியேற்றினால் வியர்வை வெளியேறுவது குறைவடைவடையும்.

பருத்தித் துணி

கோடை காலத்துக்கு பொறுத்தமான சௌகரியமான ஆடைகளை தெரிவு செய்து அணிவதன் மூலம் வெளியேறுவதை தடுக்க முடியும். குறிப்பாக பருத்தி உடை அணிவதால் சருமம் நன்கு காற்றை உள்வாங்கி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

அக்குள் க்ரீம்கள்

வியர்வை வெளியேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த  அக்குள்களில் அதற்குரிய கிரீம்களைப் பயன்படுத்துவது சிறந்த தீர்வு கொடுக்கும். வியர்வையால் ஏற்படும் துர்நாற்றமும் தடுக்கப்படும்.

Share.

Leave A Reply

Don`t copy text!