சிறுத்தை ஒன்று பதுங்கி பதுங்கி மான் குட்டியை வெறித்தனமாக வேட்டையாடும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் மிருகங்களின் வீடியோக்கள் பலவற்றை பார்த்திருப்போம். அதில் சிலவை சுவாரஸ்யமாக இருக்கும் சிலவை பார்க்கவே த்ரிலிங்காக இருக்கும். இதுவரை சிறுத்தை வேட்டையாடுவதை பார்க்காதவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பரிதவிப்பை உண்டாக்கும்.
இந்த வீடியோவில் மான் ஒன்று புற்களை மேய்ந்துகொண்டிருக்கையில், சிறுது தூரத்தில் சிறுத்தை மண்திட்டுகளின் பின் மறைந்திருக்கிறது. தொடர்ந்து, அடி மேல் அடி வைத்து மெதுவாக பதுங்கி சென்று, சாமர்த்தியமாக அந்த மானை வேட்டையாடுவது முழுவதும் பதிவாகியுள்ளது.
ஏதோ அச்சுற்றுத்தல் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த மானும் அங்கிகே இங்கே என நோட்டம் விடுகிறது ஆனால் சிறுத்தை பதுங்கியிருப்பதை அதனால் கண்டறிய முடியவில்லை.
அந்த சிறுத்தை எப்படியோ மானின் கண்ணில் படாமல் பதுங்கி கடைசியாக அந்த மானை வெறித்தனமாக வேட்டையாடுகிறது.”சிறுத்தைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை, திருட்டுத்தனமானவை”என்பது இந்த வீடியோவில் தெரிகிறது.

