நாட்டில் உணவகங்கள், அருந்தகங்களை படிப்படியாக மூன்று கட்டங்களில் திறப்பதற்கு உரிமையாளர்களுடன் அரசு கலந்தாலோசித்து வருகிறது. திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
நான்கு வாரகால இடைவெளிகளைக் கொண்ட அந்த மூன்று கட்டங்களுக்கு மான நேர அட்டவணை, தொற்று வீதம், தடுப்பூசி ஏற்றப்பட்டோரின் எண்ணிக்கை என்பனவற்றை நிபந்தனையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீண்டகாலமாக முடங்கிப் போய் உள்ள உணவகத் துறையை மீள இயக்கி வழமைக்குக் கொண்டுவருவது பற்றி உணவகங்கள், மற்றும் ஹொட்டேல், உணவு சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஹொட்டேல்கள், மற்றும் அரச தனியார் பணிமனைகளில் பலர் ஒன்றாகக்கூடி உணவு அருந்துகின்ற இடங்களையும் அங்குள்ள அருந்தகங்களையும் முதலில் திறப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.(les salles des hôtels pour y prendre petit déjeuner et dîner.)
வைரஸ் தொற்றும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ள இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் உணவகங்கள், அருந்த கங்கள், உள்ளக விளையாட்டு அரங்கு கள் என்பன உள்ளன. இதனை சுகாதார அறிவியல் நிபுணர்கள் குழு மீண்டும் சுட்டிக்காட்டி உள்ளது.
எனவே உணவகங்களைத் திறப்பது பெரும்பாலும் நாடு சுகாதார நெருக்கடி யில் இருந்து விடுபடுகின்ற கடைசிக் கட்டத்திலேயே நிகழ வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்படுகிறது.

