12.09.2023
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
மாறாயிலுப்பை நெடுங்கேணி
நிதி உதவி:இங்கிலாந் மில்டன்கின்ஸ் உறவுகள்
அன்பான உறவுகளே!
தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் வழங்கி வருகின்றோம்.
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!
மாறாயிலுப்பை நெடுங்கேணி மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும்அறநெறி வகுப்புகள் இங்கிலாந்து உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மகளிர் அணியின் காப்பாளர் திருமதி மாலதி அவர்களின் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது. அந்த வகையில் இந்த வளாகத்தினை உதவும் இதயங்கள் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக திரு திருச்செல்வம் அவர்கள் வாக்குறுதியளித்திருந்தார் அத்துடன் கிராமசேவகர் மாறாயிலுப்பை, பிரதேசசெயலாளர் நெடுங்கேணி,மாதர்சங்கம் மாறாயிலுப்பை அவர்களும் ஒப்படைப்பதாக எழுத்து மூலம் ஆவணப்படுத்தியதன் காரணத்தினால் நாம் இந்த வளாகத்துக்குள் இருந்த கட்டிதத்தினை திருத்தி இலவசமாக மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும்அறநெறி வகுப்புகள் நடத்தி வருகின்றோம். இந்த வளாகத்துக்குள் மலசலகூடமும் தண்ணீர் வசதியும் இல்லாத காரணத்தினால் இங்கிலாந் மில்டன்கின்ஸ் உறவுகள் வழங்கிய நிதியில் இருந்து வேலிவேலைகளும் மற்றும் மலசலகூடமும், தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
தற்போது எமக்கு வழங்கிய கணக்கின் படி 371,000.00 ரூபாய்
வழங்கியுள்ளோம். மிகுதிக்கணக்கு என்னும் திரு திருச்செல்வம் அவர்களால் கணக்குகள் என்னும் முடிக்கவில்லை நாம் என்னும் சிறு தொகை பணம் வழங்க வேண்டும். இந்த நிதி உதவி வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி அத்துடன் இந்த நிதி உதவியை ஏற்பாடு செய்து தந்த திருமதி மாலதி அவர்களுக்கு நன்றிகள் .
உதவும் இதயங்கள் நிறுவனம்.