யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 26/12/2024 அன்று சந்தேகத்திற்குரிய வகையில் திடீரென றொனால்ட் என்பவரின் வீட்டின் உள் புகுந்த இராணுவம்,பிரான்சில் றொசான் தேவபாலன் எனப்படும் அவரது சகோதரன் மற்றும் சகோதரனின் மகள் LTTEக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபடுதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்துமாறும் அச்சுறுத்தியதுடன் வீட்டில் இருந்த அவரது மகள் றொசானி எனும் யுவதியை பலவந்தமாக தாக்கி வீட்டை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி எச்சரிக்கை விடுத்து விட்டுச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த செயற்பாடு அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

