பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் பொலன்னறுவை எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முதியவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

