கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்றதற்காக 83 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி பாதையில் நிலத்தை விற்பனை செய்ததற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக மோசடிப் பிரிவு நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்ததன் பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதன் படி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிலத்தை விற்ற குற்றச்சாட்டில் பத்தரமுல்லையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இருந்தபோது குறித்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

