யாழ். கொழும்புத்துறைவீதி, பாண்டியன் தாழ்வைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வசந்தி மோகன் அவர்கள் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா இராசரெத்தினம், அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திருகோணமலையைச் சேர்ந்த கணேஸ் ராயம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோகன் அவர்களின் அன்பு மனைவியும்,
கருணைராஜ்(திருகோணமலை), சுமந்தி(கனடா), கண்ணன்(நெதர்லாந்து), இராஜசோழன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற இராஜபாண்டியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டினேசன், ரயுனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரதீபா பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
மதியழகி பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

