இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு MI-17V5 ரக உலங்கு வானூர்திகள் நாட்டுக்கு வந்தடைந்துள்ளன.
இந்த வானூர்திகளுடன் 22 பேர் கொண்ட விமானப்படைக் குழுவினர் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களும்,
நேற்று (29) மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த உலங்குவானூர்திகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த பயன்படுத்தப்படவுள்ளன.

