இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் அயோமல் அகலங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும், உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் இப் போட்டிகளில் நேற்றைய தினம் (29-04-2023) உயரம் தாண்டுதல் போட்டியில் நிலுபுல் பெஹெசர வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேவேளை, பெஹெசர 2.01 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேபோல், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கசுனி நிர்மலி விக்ரமசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

