கிராம்பு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சமையல் பொருள் என எல்லோருக்கும் தெரியும் ஆனால் வாஸ்து சாஸ்திரங்கள் படியும் கிராம்பு சில பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.
எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றலின் விளைவுகள் நம் வாழ்வில் உள்ளன. இருப்பினும், அதிகப்படியான எதிர்மறை ஆற்றல் அழிவைக் குறிக்கிறது. வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்க கிராம்புகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
வாஸ்து படி இரண்டு கிராம்புகளை மட்டும் தலையணைக்கு அடியில் வைத்திருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஏற்ற வழி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இரவில் கெட்ட கனவுகள் வருகிறதா அதற்கும் கிராம்பு சிறந்த தீர்வாகும். கிராம்புகளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும். கனவு வராது, நல்ல தூக்கம் வரும் எனவும் நம்பப்படுகிறது.
மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்தாலும், கிராம்பை தலையணைக்கு அடியில் வைத்து நல்ல பலன்களை பெறலாம். இதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகளும் நீங்கி, நிதி நிலை உயரும் எனவும் சொல்லப்படுகிறது.