யா/எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், கொழும்பு (பம்பலப்பிட்டி) , கனடா (ரொறொன்ரோ) ஆகிய இடங்களை வதிவுடமாகவும் கொண்ட திரு வீரகத்தி நடராசா அவர்கள் கனடாவில் 13.03.2024 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வீரகத்தி முத்துப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அசோகராணியின் அன்புக் கணவரும் ஆவார்.
பாஸ்கரன்(பாபு), பிரபாகரன்(பிரபு), யசோதா(யசோ), துஷ்யந்தி(துசி), அனசூயை(அனு) அகியோரின் அன்புத்தந்தையும்;
ஆர்த்தி, அரணன், பிரணவன், அர்சூன், அனுஷ்கா, சேயோன், யஸ்மிகா, மாயோன், சத்தியன், ரோகிணி, ஆதவன், கரிணி, நிருபமா, ஆதித்தியன் ஆகியோரின் பேரனுமாவார்.
காலஞ்சென்ற செல்வராசா, காலஞ்சென்ற சேனாதிராசா, காலஞ்சென்ற நாகேசுவரி, தியாகராசா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச்சகோதரரும் யாசோதா, றேணுகா, தயாபரன், வசந்தராசா, கேசவன் ஆகியோரின் மாமானுமாவார்.
காண்பவர் மனதினை
ஈர்த்திடும் முகமே!
கண்ணுக்குள் இன்றும்
நிற்குது முன்னே…!
இளையவர் முதியவர்
எவர்முன் நிற்பினும்
அவரவர் தகமைக்கு
ஏற்றால் போலவே…
பேசிப் பழகிடும்
பேராற்றல் கொண்டவர்..
கணீர்க் குரலால்
கவர்ந்திடும் கள்வர்…
அழகு தமிழிலும்
ஆங்கில மொழியிலும்
அயலவர் மொழியிலும்
சரளமாய்ப் பேசியே…
சாதனை புரிந்திட்ட
சாதனை வீரன்…
போதனை செய்வதிற்
போதனை ஆளன்…
சுங்கப் பகுதியின்
துணைத் செயலாளர்
டோட்டரிச் சங்கத்தின்
தலவரும் இவரே…
பம்பலப் பிட்டியின்
சமாதான நீதவான்..
நம்மூர்க் கனடாச்
சங்கத் தலைவர்…
உதவி செய்வதில்
உத்தம புருசர்…
கடமை செய்வதில்
கண்ணியம் மிக்கவர்..
அன்பும் பண்பும்
அழகிய மனமும்
கண்முன் நிற்குதே
ஐயனே என்செய…!
அலறுது மனது…
உளறுது உணர்வு…
இயதயம் முழுக்க
உன்தன் நினைவே…
மறுக்குது மனது
மறைந்ததை ஏற்க..
நெஞ்சது நோகுது
நினைத்துப் பார்க்கையில்
சத்திர சிகிச்சை
ஒருகாலில் செய்து
தடியுடன் நடந்து
இருந்திட்ட வேளையில்
மறுகாலில் வேண்டாம்
சத்திர சிகிச்சை -என
மன்றாடி நின்றேன்
கேட்டிட இல்லை….
நம்பிக்கை கொண்டே
செய்த சிகிச்சை..
சில்லுக் கதிரையில்
இருத்தியே வைத்ததே..!
நடக்க முடியாது
வண்டியில் திரிவதிலும்
மேலே செல்வது
மேலென எண்ணீர்களோ.!
உலகினில் வந்துநீர்
உண்மையாய் உழைத்தீர்
ஊருலகம் போற்றிட
உவகையுடன் வாழ்ந்தீர்..
போதும் போதும்
மண்ணின் வாழ்வு
விண்ணகம் சென்று
நிம்மதி காண்பீர்…
பிறந்த பலனை
அடைந்தது உண்மை..
இறந்தபின் மீண்டும்
பிறவாமை வேண்டும்..
இறைவன் அடியில்
முத்தி பெறவே…
இணைந்து நாமெலாம்
வேண்டி நிற்கிறோம்..🙏🏽
நடராசன் பாதத்தில்
நல்லபடி சேர்ந்திட
அவன் பெயர்கொண்டே
அவனியில் வந்தீரோ..!
சாந்தி! சாந்தி!!
ஓமோம் சாந்தி
சாந்தி சாந்தி
ஓமோம் சாந்தி ஓம்..
தகவல் செல்லத்துரை மனோகரலிங்கம்