இனிப்பு உணவு வகைகளின் இறக்குமதிக்காக டொலர் கையிருப்பு அதிகளவில் செலவிடப்படுவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் இலங்கைக்கான மிட்டாய் மற்றும் இனிப்பு உணவுகள் இறக்குமதிக்காக 220.5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 123 மில்லியன் டொலர்கள் அதிகளவில் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் (2022) முதல் மாதங்களில் மிட்டாய் மற்றும் இனிப்பு உணவுகள் இறக்குமதிக்காக 98.6 மில்லியன் டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனி மற்றும் இனிப்பு உணவுகள் இறக்குமதிக்காக மே மாதத்தில் மாத்திரம் 59.8 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் மே மாதத்தில் அதற்கான செலவு 12.8 மில்லியன் டொலர்கள் எனவும் 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 367 சதவீதம் செலவு இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

