யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (07) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்வரன் நிக்சன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
இந்நிலையில் இரவு தொடக்கம் அதிகாலை வரை உறங்கம் இல்லாமல் இருந்துள்ளார். இதன்போது அவரது தாயார் மற்றும் மனைவியும் உடனிருந்துள்ளனர்.
பின்னர் அதிகாலை 3.00 மணியளவில் தான் உறங்கப்போவதாகவும், அவர்களையும் உறங்குமாறு கூறிய நிலையில் அவர்கள் உறக்கத்துக்கு சென்றுள்ளனர்.
பின்னர் சிறிது நேரத்தில் கண் விழித்த தாயார் தனது மகனை காணவில்லை என தேடியபோது வீட்டினுள் சடலமாக தூக்கில் தொங்கியபடி காணப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும், மல்லாகம் நீதிமன்ற நீதிவானும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை பார்வையிட்டுள்ளார்.

