யாழ்ப்பாணம் அச்சுவேலி மரக்கறிச் சந்தையில் எழுமாற்றாாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வியாபாரிகள் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவருடைய தகவலின் படி,
யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட மினிபஸ் நடத்துடனரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில்
யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த ஆறு பேர், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஐவர், முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த நால்வர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.